என்னை முட்டாள் போல் நடத்தாதே! நடப்பது எனக்கு தெரியும்… கமிலாவை கோபமாக எச்சரித்த இளவரசி டயானா


சார்லஸ் – டயானா திருமண வாழ்க்கைக்குள் கமிலா வந்த தருணங்கள் தொடர்பான பலருக்கும் தெரியாத புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் – இளவரசி டயானாவுக்கு கடந்த 1981ல் திருமணம் நடந்து 1996ல் விவாகரத்து ஆனது.
விவாகரத்துக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே 1992ல் இருந்தே இருவரும் பிரிந்து வாழ தொடங்கிவிட்டனர்.

சார்லஸ் – கமிலா இடையிலான காதல்

டயானாவை மணப்பதற்கு முன்னரே கமிலாவை சார்லஸ் காதலித்த நிலையில் அப்போது அது திருமணத்தில் கைகூடவில்லை.
இருந்த போதிலும் திருமணத்திற்கு பின்னரும் கமிலாவுடனான தொடர்பை சார்லஸ் தொடர்ந்திருக்கிறார்.

இளவரசி டயானா ஒருமுறை விருந்து ஒன்றில் கமிலாவிடம் சார்லஸுடனான தனது விவகாரம் பற்றி எதிர்கொண்டு பேசினார். அது தனது திருமணத்தின் துணிச்சலான தருணம் என்று பின்னாளில் டயானா விவரித்தார்.

என்னை முட்டாள் போல் நடத்தாதே! நடப்பது எனக்கு தெரியும்... கமிலாவை கோபமாக எச்சரித்த இளவரசி டயானா | Princess Diana Camilla Warning Charles

Hugo Burnand/Pool/Getty Images/TIM GRAHAM//GETTY IMAGES

இது தொடர்பாக டயானாவின் முன்னாள் அரச பாதுகாப்பு அதிகாரி கென் வர்பீ தற்போது பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், கமிலாவின் சகோதரி தான் அந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்.
அங்கு டயானா சென்றவுடன் என்னிடம், நீ என்னுடன் வர வேண்டும், என் கணவரையோ அல்லது கமிலாவையோ என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.

வேதனைப்பட்ட டயானா

டயானா அப்போது மிகுந்த வேதனையில் இருந்தார், பிறகு சார்லஸும், கமிலாவும் அங்குள்ள சோபாவில் அமர்ந்து பேசி கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம்.

இதையடுத்து டயானா கமிலாவிடம் சென்று கடுமையான எச்சரிக்கையை செய்தார்.
அந்த நேரத்தில் டயானா என்ன செய்யப் போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், மிகுந்த நம்பிக்கையுடன், டயானா அங்கு சென்று கமிலாவிடம், ‘தயவுசெய்து என்னை ஒரு முட்டாள் போல் நடத்தாதே, என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும் என சொன்னார்.

அதாவது சார்லஸ், கமிலாவின் தொடர்பை பற்றி தான் டயானா அவரிடம் பேசியதாக கென் தெரிவித்துள்ளார். 

என்னை முட்டாள் போல் நடத்தாதே! நடப்பது எனக்கு தெரியும்... கமிலாவை கோபமாக எச்சரித்த இளவரசி டயானா | Princess Diana Camilla Warning Charles

dailysabah



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.