சமீபகாலமாகவே கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இது பற்றி, போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் கூட இந்த குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது.
அந்த வகையில் கோவை மாவட்டம் நீலாம்பூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளை ஒரு கும்பல் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் நபர்களை குறி வைத்து இந்த வழிப்பறி நடப்பதாக கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் சாலையில் இரண்டு நபர்கள் நடந்து சென்றனர். அந்த கும்பல் புதருக்குள் மறைந்து கொண்டிருந்த நிலையில், திடீரென வெளிவந்து அந்த இளைஞர்களை மரித்து பணம் கேட்டு மிரட்டி இருக்கிறது. ஆனால் இருவரும் பணம் இல்லை என்று கூறியதால் உங்கள் கையில் காசு இல்லை என்றால் google pay மூலம் காசு அனுப்புங்கள் என்று மிரட்டியுள்ளனர்.
அதுவும் இல்லை என்று கூறியதால் உன் நண்பர்களுக்கு கால் செய்து காசு அனுப்ப சொல்லு என்று மிரட்டி இருக்கின்றனர். அந்த அப்பாவி இளைஞர்கள் எங்களிடம் பணம் இல்லை என் நண்பர்களிடமும் கேட்க முடியாது என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி உள்ளனர். இதையெல்லாம் கண்டும் அந்த கொள்ளைக்கார கும்பல் மனம் இறங்காமல் இளைஞர்களின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடு இருக்கின்றனர்.
அப்பாவி இளைஞர்கள் பீதி அடைந்தவாறு பீளமேடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.