சட்ட நடவடிக்கையில் இறங்கும் மகிந்த


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக முகநூல் உட்பட சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் சேறுபூசும் பிரசாரங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

வேறு பெயர்களில் சேறுபூசும் பிரசாரங்களில் ஈடுபடும் நபர்கள்

Mahinda Rajapaksa-மகிந்த ராஜபக்ச

சமூக வலைத்தளங்கள் வழியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் சிலர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்காக கட்சியின் சட்டத்தரணிகளுக்கு அவற்றின் தகவல்களை வழங்க உள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக சேறுபூசும் பிரசாரத்தில் சில அணிகள் ஈடுபட்டுள்ளன. வேறு பெயர்களில் இவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் அதன் தலைவர்களுக்கு எதிராகவும் சேறுபூசும் பிரசாரங்களை றேம்கொண்டு வருகின்றனர்.

தேர்தலை இலக்கு வைத்து கட்சிக்கு எதிராக தாக்குதல்

Sagara Kariyawasam-சாகர காரியவசம்

குறிப்பாக அடுத்த தேர்தலை இலக்கு வைத்து, பொஜன பெரமுன தொடர்பில் மக்களின் அதிருப்பை அதிகரிப்பதற்காக இந்த குழுவினர், ஒரு படையாக இணைந்து கட்சிக்கு எதிராக தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

கட்சிக்கு எதிராக இந்த சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வரும் நபர்கள், போராட்டம் நடைபெற்ற காலத்தில் கட்சிக்கும், கட்சியின் தலைவர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் வகையில் அவதூறுகளை செய்தனர்.

இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

இதற்கு அமைய கட்சியின் சட்டத்தரணிகள் விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.