சூரத்: சாவர்க்கரை அவமதிப்பவர்களை குஜராத் மக்கள் ஏற்க மாட்டார்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.
சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கீழ்படிந்து நடப்பதாக கூறி, மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து சிறையிலிருந்து விடுதலையானார்’ என, ராகுல் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார். இதற்கு மஹாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிவசேனா மற்றும் பா.ஜ., கட்சியினர் ராகுலுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளனர். மேலும் காங்., எம்.பி., ராகுல் மீது மஹாராஷ்டிரா போலீசார் அவதுாறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவதாவது : காங்., ஆட்சியில் இருக்கும் போது ஹிந்து பயங்கரவாதம் குறித்து பேசினார்கள். கடந்த 70 ஆண்டுகளில் சர்தார் வல்லபாய் படேலை நாடு மறக்கும்படி காங்., செய்தது.
ஆம் ஆத்மியை குஜராத் மக்கள் ஏற்க மாட்டார்கள்
டில்லியை பொறுத்தவரை, அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயினுக்கு நேர்மையானவர் என சான்றிதழை வழங்கினார். ஆனால் அவர் 5 மாதங்களாக சிறையில் இருக்கிறார். இவர்களின் கல்வி அமைச்சர் மதுபான வழக்கில் முதன்மை குற்றவாளி ஆவார். ஆம் ஆத்மியை குஜராத் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

சாவர்க்கரை அவமதிப்பவர்களை குஜராத் மக்கள் ஏற்க மாட்டார்கள். பஞ்சாப் சுகாதார அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டு 2 மாதங்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 3 மாதங்களில் 70 கொலைகள் அங்கு நடந்துள்ளது.
உ. பி, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் காங்., மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தது என்பது மக்கள் அவர்களை நிராகரித்து உள்ளதை காட்டுகிறது. ஆனால் ஹிம்மாசல பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் வராதது, காங்., சின் வியூகமா அல்லது அதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்ளதா? என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement