திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 'மசாஜ்' – வெளியான சிசிடிவி காட்சி

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறைக்குள் இருந்தபடியே மசாஜ் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும், டெல்லி அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை சார்ர்பில் சிபிஐ நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திகார் சிறை காவல் கண்காணிப்பாளர் இடை நீக்கம் செய்யப்பட்துடன் 11 அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.

image
இதனிடையே திகார் சிறையில் இருந்த சத்யேந்தர் ஜெயினுக்கு சகல வசதிகள் செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த காட்சிகளில் சத்யேந்தர் ஜெயினுக்கு  பீஸ்லரி குடிநீர் பாட்டில்கள் , பஞ்சு மெத்தை , தலையணைகள், டிவி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நபர்கள் சிலரால் கை, கால், தலை மசாஜ் செய்யப்பட்டுள்ளது, அத்தோடு பிசியோ தெரபி, ஆயில் பாத் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது.

image
சிறையில் சத்யேந்தர் ஜெயின் பல கொடுமைகள் அனுபவிப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறிய நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்களும் மேடைக்கு மேடை குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில் இந்த வீடியோ பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும்  உள்ளாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.