தேர்தல் நேரத்தில் தான் இந்துக்களுக்கு ஆபத்து என கூறுவார்கள்; பரூக் அப்துல்லா காட்டம்.!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.

அந்தவகையில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக மற்றும்
காங்கிரஸ்
உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரில் உள்ள அக்னூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘ எந்த மதமும் தவறானது கிடையாது. மனிதர்கள் தான் எப்போதும் கீழ்த்தரமான வேலைகளை செய்கின்றனர். எனவே மதம் அல்ல. அனைத்து மதங்களும் ஒழுக்க நெறிகளை தான் போதிக்கின்றன. தேர்தல் நேரத்தில், இங்கு இந்துக்களின் உயிர்களுக்கு ஆபத்து என கோஷமிடுவார்கள். மக்கள் அதற்கு இரையாகி விடக்கூடாது என நான் உங்களை பணிந்து கேட்டுக் கொள்கின்றேன்.

நாங்கள் எப்போதும் பாகிஸ்தானுடன் இணைந்தது கிடையாது. பாகிஸ்தானுடன் இணைய சொல்லி ஜின்னா என் அப்பாவிடம் வந்து பேசினார். ஆனால் அப்பா அதை மறுத்துவிட்டார். இதை சொல்வதற்கு நான் பெருமைபடுகிறேன். பாகிஸ்தானுக்கு ஆதரவாக எப்போதும் நாங்கள் செயல்பட்டது கிடையாது. பாகிஸ்தான் இன்னும் மேம்படவில்லை.

கடந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அவை எங்கே?. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், இளைஞர்கள் இங்கு வேலை வாய்ப்புகள் இன்றி தவித்து வருகின்றனர். இதற்கு ஆளுநரை கைகாட்டி அவர்கள் தப்பிக்க முடியாது. எனவே தற்போதைய தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மக்கள் உணர வேண்டும்’’ என்று பரூக் அப்துல்லா பேசினார்.

ராகுல் காந்தி படுகொலை செய்யப்படுவார்; மர்ம கடிதத்தால் பரபரப்பு.!

அதேபோல் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவில் இருந்து தான் விலகப் போவதாகவும், அந்த பதவியை இளைஞர்கள் நியமிக்கப்படுவார் என்று கடந்த சில நாட்களுக்கு முன் பரூக் அப்துல்லா கூறியிருந்தார். கட்சி தலைவர் பதவி அவரது மகன் ஒமர் அப்துல்லாவிற்கு வழங்கப்பட இருப்பதாக பரவலாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும் வரையில் தலைமை பொறுப்பை ஏற்கமாட்டேன் என ஒமர் அப்துல்லா கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.