நடுரோட்டில் பிரபல தமிழ் நடிகருக்கு நடந்த சம்பவம்! இரவு நேரத்தில் அதிர்ச்சி


சென்னையில் சாலையில் நின்று கொண்டிருந்த பிரபல நடிகரிடம் இருந்து விலையுயர்ந்த செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் இளங்கோ குமரவேல்

தமிழில் அழகி, சண்டைக்கோழி, வெள்ளித்திரை, பயணம், அபியும் நானும், விக்ரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் இளங்கோ குமரவேல்.

திரைக்கதை ஆசிரியராகவும் இருக்கும் இவர், அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று திரைப்படத்தின் திரைக்கதை எழுதியுள்ளார்.

இளங்கோ குமரவேல்

செல்போன் திருட்டு

இவர், நேற்றிரவு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு, வீடு திரும்புவதற்காக, அடையாறு ஐயப்பன் கோவில் அருகே வாடகை கார் முன் பதிவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவருடையை கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் அதிர்ச்சியடைந்த நிலையில், தப்பி ஓடிய நபர்களை பின்னால் சிறிது தூரம் துரத்தினார். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக குமரவேல் அளித்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.