காரைக்குடி அருகே நண்பர்களிடம் கார் இரவல் வாங்கி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
வேலங்குடி பைபாஸ் சாலையில் வசித்து வரும் செல்வகணபதி என்பவர் தனது வீட்டில் 2 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனது குறித்து போலீசில் புகார் அளித்திருந்தார்.
சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் அக்கம்பக்கம் நோட்டமிட்டு வீடு புகுந்து திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கொக்கி குமார் என்பவருக்கு சொந்தமான காரை அவரது நண்பரான பானா வயலை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இரவல் வாங்கி தனது கூட்டாளிகளுடன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.