நித்யா மேனனின் கர்ப்பம் உறுதியா?… புகைப்படத்தால் ஆடிப்போன ரசிகர்கள்

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நித்யா மேனன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை, வெப்பம், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை, மணிரத்னத்தின் ஓகே கண்மணி, ஸ்ரீப்ரியா இயக்கிய மாலினி 22 பாளையங்கோட்டை, விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24 போன்ற படங்களில் நடித்திருக்கும் நித்யா மேனனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.  இவர் சமீபத்தில் தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக நித்யா மேனனின் நடிப்பு பலரது பாராட்டைப் பெற்றது. சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த 19(1)(a) என்ற படமும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

இந்தச் சூழலில் சமீபத்தில் கருத்தரிப்பு சோதனை செய்யும் கருவியில் கர்ப்பம் உறுதியானது போன்ற புகைப்படத்தை நித்யா மேனன் பகிர்ந்திருந்தது வைரலானது.

இந்நிலையில் நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.  இதனைப் பார்த்த ரசிகர்கள் திருமணத்துக்கு முன் நித்யா மேனன் கர்ப்பமானது உறுதியா என கேள்வி எழுப்பிவருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nithya Menen (@nithyamenen)

ஆனால், அந்தப் புகைப்படத்துக்கு கீழே நித்யா மேனன், கர்ப்பம் எப்போதும் அழகாக இருந்ததில்லை. இன்னும் சில புகைப்படங்களை பகிர்கிறேன். நான் உண்மையாக கர்ப்பமாக இல்லை என குறிப்பிட்டுள்ளார். அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் மூலம் நித்யா மேனன் பெயரிடப்படாத படம் ஒன்றில் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்துவருவதும், அது தொடர்பான புகைப்படங்கள்தான் இவை இது என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் நித்யா மேனன் கர்ப்பமா என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வந்துள்ளது.

முன்னதாக, நித்யா மேனனுக்கும்,மலையாள திரையுலகில் கதாநாயகன் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் நித்யா மேனன் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். 

இதுகுறித்து பேசிய நித்யா, “எனக்கு திருமணம் என்று சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்தியில் முற்றிலும் உண்மை இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மையை சரிபார்க்க ஊடகங்கள் முயல வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.  தற்போது எனது வேலையில் மட்டுமே நான் முழு கவனத்தையும் செலுத்திவருகிறேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.