பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிக்கை; அமலாக்கத்துறை அதிரடி.!

கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி, எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு, 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆப்ரேஷன் ஆக்டோபஸ் என அழைக்கப்பட்ட இந்த மெகா சோதனையில், தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தடை செய்யப்பட்ட இயங்கங்களில் இணையும் படி மக்களைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள், வசிக்கும் பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகவும், பிஎஃப்ஐ-யின் தேசிய, மாநில, மற்றும் உள்ளூர் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சோதனை குறித்து கருத்து தெரிவித்திருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, ‘எதிர்ப்பாளர்களின் குரலை நசுக்க அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகின்றது’ என குற்றம்சாட்டியிருந்தது. அந்த அமைப்பின் தலைவரான ஓஎம்ஏ சலாம், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். கேரளா மாநிலம் மலப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மீது என்.ஐ.ஏ. சுமத்தியது.

டிஆர்எஸ் எம்எல்ஏக்களிடம் பேரம்; பாஜக மூத்த தலைவருக்கு சம்மன் – தெலங்கானா அரசு அதிரடி.!

இந்தநிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மீது, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி பிஎஃப்ஐ தலைவர் பர்வேஸ் அகமது, அதன் பொதுச்செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் அலுவலக செயலாளர் அப்துல் முகீத் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமலாகத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.