முத்துநகர் எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு மிரட்டல்: சோதனையில் இறங்கிய நிபுணர்கள்!

தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து தினமும் இரவு 8.20 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் ஒருநபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார் மற்றும் மத்திய பாகம் போலீசார், ரயில் பெட்டிகள் பயணிகளின் உடமைகள், ரயில் நிலைய வளாகம் என பல்வேறு பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து 8.20 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் காலதாமதமாக 8.45 மணியளவிற்கு புறப்பட்டு சென்றது.

இது தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஆத்தூர் அருகே உள்ள செய்துவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர் குடிபோதையில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு வைத்ததாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.