போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டில் யாழ்ப்பாண சிறைச்சாலையில்; தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 பேரின் நலன்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இவர்களை ஆளூநர் நேற்று முன்தினம் (17) சந்தித்துள்ளார்.
தமது எதிர்காலம் எவ்வாறு அமையும் என்ற கவலையுடன் இருக்கும் இந்த இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும சில நலத்திட்டங்களை இதன் போது ஆளூநர் சுட்டிக்காட்டியதாக ஆளூநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் நலனுக்கான திட்டங்களை, வடமாகாணத்திலேயே முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.