ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்… இருளில் மூழ்கிய உக்ரைன்!

ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த வாரம் முக்கிய சம்பவம் நடந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளும் மக்களும் இந்த சம்பவத்தை ரஷ்யாவின் தோல்வியாகவே பார்த்தனர். உக்ரைனே கூட அதை ஒரு வெற்றியாகக் கருதி கொண்டாடத் தொடங்கியது. ஆனால் புடினின் திட்டம் வேறாக இருந்தது. ரஷ்யா உக்ரைனில் 2 அடிகள் பின்வாங்கி, நடத்திய தாக்குதலில், உக்ரைன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உண்மையில், கடந்த வாரம் ரஷ்ய இராணுவம் உக்ரைனின் கேர்சன் நகரில் இருந்து வெளியேற முடிவு செய்திருந்தது. புடினின் இந்த உத்தியை புரிந்து கொள்ளாமல் சிக்கிய உக்ரைன், இந்த நிகழ்வை கொண்டாடத் தொடங்கியது. இதற்குப் பிறகு, ரஷ்யா நவம்பர் 15 அன்று உக்ரைன் மீது 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலால் உக்ரைனின் மின்சார கிரிட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை அழிக்கப்பட்டுள்ளன. மேலும் உக்ரைனின் தலைநகரான கியேவ் உட்பட பிற நகரங்களில் மின்சாரம் விநியோகம் இல்லாமல் ஸ்தம்பித்துள்ளது.

புடின் அடித்த ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ 

கடந்த வாரம் திடீரென ரஷ்ய இராணுவம் கெர்சனில் இருந்து பின்வாங்க முடிவு செய்தது. அவரது முடிவு தோல்வியை ஏற்கத் தொடங்கியதாகவே கருதப்பட்டது. அதன் கொண்டாட்டத்தில் உக்ரைன் ராணுவமும் மூழ்கியது. கொண்டாட்டங்களுக்கு மத்தியில், ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் உட்பட பல நகரங்களில் மொத்தம் 100 ஏவுகணைகளை வீசி, மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்தது. இதன் காரணமாக, அதன் மின் இணைப்பு 60 சதவீதம் சேதமடைந்துள்ளது. பெரும்பாலான நகரங்களில் மின்சார சப்ளை வழங்கும் கிரிட்கள் பழுதடைந்து இருளில் மூழ்கியுள்ளன. அதே நேரத்தில், உக்ரைன் அதிபர் அலுவலகம் இந்த தாக்குதல்களை ‘தோல்வி அடைந்த கோழைகள் மேற்கொள்ளும் மோசமான தந்திரங்கள்’ என்று காட்டமாக கூறியுள்ளது.

மேலும் படிக்க | FIFA ​உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான பரிசுத்தொகை அதிரடி அதிகரிப்பு

அணை இடிந்து விழுந்து 4 பேர் பலி

நவம்பர் 15ஆம் தேதி ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் மின்கம்பம் மட்டுமின்றி ஒரு பெரிய அணையும் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மின் உற்பத்தியில் இந்த தடுப்பணை மிகவும் முக்கியமானதாக இருந்தது. இது தவிர, பல கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடிய உக்ரைன் 

ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, உக்ரைனின் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல், ஐரோப்பிய நட்பு நாடுகளின் உதவியை நாடினார். நவம்பர் 15 அன்று, ரஷ்யா 100 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைனின் வெவ்வேறு நகரங்களில் வீசியுள்ளது. இதனால் நமது மின்சாரம் சப்ளை ஸ்தம்பித்துள்ளது. இந்த தாக்குதல்களில் சேதமடைந்த மின் கிரிட்களை சரி செய்ய வேண்டும். இதற்கு எங்களுக்கு ஐரோப்பிய நாடுகளின் உதவி தேவை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | இந்தியாவின் வீழ்ச்சிக்கு இவர்கள்தான் காரணமா? – தேர்வுக்குழுவை தூக்கியடித்த பிசிசிஐ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.