புதுடில்லி: தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதனால் நவ..,19,20 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நவ.20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனமழைக்கு தயாராக இருங்கள்:
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு காரணமாக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை கமிஷனருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement