வெறித்தனமாக இறங்கிய விஜய்; நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்துள்ள நடிகர்களில் ஒருவராக விஜய் உள்ளார். பீஸ்ட் படத்துக்கு பிறகு வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருவதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வாரிசு படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதற்கு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் தெலுங்கு படங்களுக்கு தான் அதிகமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்றும், டப்பிங் படங்களுக்கு குறைவான தியேட்டர்களே ஒதுக்கப்படும் என்றும், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சில் அறிவித்துள்ளது.

இதனால் ‘வாரிசு’ படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால், இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அகில இந்திய தளபதி விஜய் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை நாளை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வருமாறு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாரிசு படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து, மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்கு விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவ்வப்போது பரபரப்பு தகவல் பரவுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை வரவழைத்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார்.

இந்த சூழலில் தனது படத்துக்கே இப்படியொரு சிக்கல் வரும் என்ற நினைத்து கூட பார்க்காத விஜய் அதிர்ச்சியில் உறைந்து இருந்தபோது, ‘இனியும் அரசியலுக்கு வராமல் இருந்தால் எப்பவும் வாய்ப்பு இல்லை.

எனவே இதையே வாய்ப்பாக பயன்படுத்தி ரசிகர்களை முடுக்கிவிடுங்கள்’ என நெருங்கிய வட்டாரங்கள் ஆலோசனை தந்ததாகவும், அதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்தே ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.