125 மில்லியன் யூரோ மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்! நாட்டிலே கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவு என அதிர்ச்சி

ஸ்பெயினில் 52 டன் அளவிலான கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

52 டன் கஞ்சா

ஸ்பெயின் நாட்டின் கேடலோனியாவில் உள்ள வடகிழக்கு பகுதியில், 8 பண்ணைகள் அகற்றப்பட்டு 52 டன் அளவிலான கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பண்ணைகள் அனைத்தும் சட்டப்பூர்வ சணல் தோட்டங்களாகக் கருதப்பட்டு, ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு சொந்தமானவை என பதிவு செய்யப்பட்டிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

125 மில்லியன் யூரோ மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்! நாட்டிலே கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவு என அதிர்ச்சி | Spanish Police Seize Big Amount Of Marijuana

@Reuters

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மின்சார மோசடி மற்றும் பொது சுகாதாரத்திற்கு எதிரான குற்றங்களிலும் அவர்கள் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

125 மில்லியன் யூரோ மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்! நாட்டிலே கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவு என அதிர்ச்சி | Spanish Police Seize Big Amount Of Marijuana

@AFP

125 மில்லியன் யூரோக்கள்

தற்போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 125 மில்லியன் யூரோக்களை எட்டக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் 32 டன் கஞ்சா போதைப்பொருள் (மரிஜுவானா) கைப்பற்றப்பட்டது, அந்த நேரத்தில் ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது 50 டன்னுக்கு அதிகமாக கைப்பற்றப்பட்டுள்ளதால் இது தான் ஸ்பெயின் நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

125 மில்லியன் யூரோ மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்! நாட்டிலே கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவு என அதிர்ச்சி | Spanish Police Seize Big Amount Of Marijuana

@Guardia Civil/Reuters

கேடலோனியா பகுதியில் சூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 187,000 தாவரங்கள் (மரிஜுவானா) மற்றும் 19 டன் மொட்டுக்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.