உயிரிழந்த காதலியுடன் திருமணம்…! இனி வேறு யாரையும் மணக்க மாட்டேன் என சத்தியம் செய்த காதலன்…!

கவுகாத்தி,

இன்றைய இளைஞர்கள் காதல் செய்வது போல் நடித்து கடைசியில் காதலியை ஏமாற்றி செல்கின்றனர். அல்லது காதலியை ரெயிலில் தள்ளி கொலை, விஷம் வைத்து கொலை, ஆசிட் அடித்தல், காதலனை ஆள்விட்டு அடிப்பது போன்ற அடாவடித்தனங்களை செய்து வருகின்றனர்.

இது தவிர ஒரு தலை காதலால் பல விபரீதங்களும் தொடர்ந்து வருகின்றன. காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களில் சிலர் சண்டை சச்சரவுகளால் பிரிந்து விடுகின்றனர். அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க எப்போதும் காதலுக்குக் கண் இல்லை என்று சொல்வார்கள். அதற்கேற்றார் போல மத, இன வேறுபாடுகளைத் தாண்டி, குறிப்பாக நாடுகளைக் கடந்தும் கூட காதல் மலர்ந்து நீங்கள் பார்த்து இருப்பீர்கள்!

ஆனால், அதையெல்லாம் மிஞ்சும் வகையில் அசாமில் வசித்து வருபவர் பிதுவன் தாமுலி . இவர் 24 வயதான பிராத்தனா போராவை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். சமீபத்தில் காதலி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். காதலியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத தாமுலி கதறி துடித்து அழுதார். இந்த அழுகை காண்பவர் கண்களில் நீரை வரவழைத்தது. சமாதானம் ஆகி கண்ணீருடன் எழுந்து சென்று போராவின் கழுத்தில் தாலி கட்டி தான் இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

இது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கூறுகையில், “நாங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தோம். இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க இருந்தோம். இருப்பினும், திடீரென யாரும் எதிர்பார்க்காத விதமாக பிராத்தனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கவுஹாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம். எவ்வளவோ முயன்றும் கூட அவரை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை என சோகத்துடன் கூறினார். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்திலும் பெரும் நெகிழ்ச்சியை உருவாக்கியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.