காசியில் ஒலித்த இளையராஜாவின் ‛ஜனனி ஜனனி…', ‛ஹர ஹர மகாதேவா…'

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசி என்னும் புண்ணிய பூமியில் நடத்துவதற்கான ஆலோசனை பிரதமருக்கு எப்படி தோன்றியது என்று எண்ணி வியந்து மகிழ்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா மோடியை புகழ்ந்து பேசினார்.

உத்தர பிரதேசத்தில் ஒரு மாதம் நடக்கும், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.,19) துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உடன் இசையமைப்பாளர் இளையராஜா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மிகவாதிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் உட்பட பல்வேறு பிரிவினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் இளையராஜா பேசியவதாவது : ‛‛காசிக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு அதிகம். பாரதியார் காசியில் 2 ஆண்டுகள் தங்கியுள்ளார். பாரதியார் 9 -11ம் வகுப்பு காசியில் பயின்றது தமிழ் மக்களுக்கு பெருமை. பாரதியார் பாடலை பற்றி சுட்டிக்காட்டினார். முத்துசாமி தீட்சதர் பற்றி நினைவு கூர்ந்தார். இவர் மும்மூர்திகளுள் ஒருவர் ஆவர். தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசி என்னும் புண்ணிய பூமியில் நடத்துவதற்கான ஆலோசனை பிரதமருக்கு எப்படி தோன்றியது என்று எண்ணி வியந்து மகிழ்கிறேன்'' என்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் ‛‛ஜனனி ஜனனி…'' பாடலை பாடினார். அதோடு நான் கடவுள் படத்தில் இடம் பெற்ற ஹர ஹர மகாதேவா பாடலையும் தனது குழுவோடு பாடி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.