சென்னை கேளம்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது சிக்னல் போர்டு முறிந்து விழுந்து விபத்துள்ளன சம்மபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கேளம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில், பழுதடைந்து காணப்பட்ட சிக்னல் போர்டு ஒன்று, சாலையில் சென்ற கார் மீது விழுந்து விபத்துக்களானது.
பல மாதங்களாக பராமரிப்பின்றி இருந்த அந்த சிக்னல் போர்டு, திடீரென இன்று முறிந்து சாலையில் சென்ற கார் மீது விழுந்தது.
இந்த விபத்தில், காரின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. நல்வாய்ப்பாக எந்த உயிர் சேதமும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக ஓஎம்ஆர் சாலை – கேளம்பாக்கத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
முன்னதாக இதேபோல் சிக்னல் போர்டு மாநகர பேருந்து மீது விழுந்து விபத்துள்ளது குறிப்பிடத்தக்கது.