அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை கொடுத்த வழக்கு தொடர்பாக பொலிசார் ஆறு பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை சாந்தினி
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம்செய்வதாக கூறி, ஏமாற்றியதாக சென்னையைச் சேர்ந்த நடிகை சாந்தினி புகார் கூறினார்.
அதன்படி மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருக்கமாக இருந்துவிட்டு பல முறை கருக்கலைப்பு செய்ததாக தெரிவித்தார்.
மேலும் மணிகண்டனை நம்பிய நான் தாலி கட்டிகொள்ளாமல் அவரது பங்களாவில் அவருடன் நெருக்கமாக இருந்து வந்தேன்.
அதனால் நான் கர்ப்பம் அடைந்து 3 முறை சென்னையில் அவருக்கு தெரிந்த மருத்துவரின் கிளினிக்கில் மணிகண்டனின் மிரட்டலுக்கு பயந்து கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார்.
பொலிசார் வழக்குப்பதிவு
இவ்வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு, பின் விடுதலையானார்.
அக்டோபர் 14ல் ராமநாதபுரம், வண்டிக்காரத்தெருவில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு சாந்தினி சென்றார்.
அப்போது, மணிகண்டனின் தாய் உள்ளிட்ட உறவினர்கள், ஆதரவாளர்கள்நடிகையை தாக்கியதாக சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனரிடம் சாந்தினி புகார் அளித்தார்.
இதன்படி, மணிகண்டனின் தாய் அன்னக்கிளி, உறவினர்கள் ரகுபதி, ஜெயவீரகுரு, விக்னேஷ், ராஜா, சென்னையைச் சேர்ந்த ராமநாதன் ஆகியோர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.