போபால்: மத்தியப் பிரதேசம் ராஜ்கர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மாடு ஒன்று ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் மாடு நடமாடியது நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின், ஒரு பசு ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் உட்புகுந்து நோயாளிகள் உட்கொள்ள வைத்திருந்த உணவு சாப்பிட்டது. இதனால் நோயாளிகள் அச்சமடைந்து, அலறல் சத்தம் போடுகின்றனர். மேலும் திடீரென உட்புகுந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து நோயாளிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் நாள் முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தாலும், இந்த மாடு ஐசியு வார்டுக்கு வந்தபோது, பாதுகாவலர்கள் யாரும் அங்கு இல்லாத காட்சி பல்வேறு தரப்பின் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மருத்துவமனையின் முன்பகுதியில் நின்று கொண்டிருந்த மாடு விரட்டியடிக்கப்பட்ட போது, பணியில் இருந்த ஊழியர் கவனக்குறைவின் காரணமாக ஐசியு வார்டுக்கு உட்புகுந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாக வைரலாகி வருகிறது.

அதே நேரத்தில், இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேசம் சுகாதார துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரியாது, ஆனால் பின்னர், வீடியோ வைரலானதை அடுத்து நடவடிக்கை எடுத்து, மூன்று பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement