வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இனி, வாட்ஸ் அப்பில் பென்ஷன் ஸ்லிப்..!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை கொடுத்து வருகிறது. குறிப்பாக, டிஜிட்டல் வங்கி சேவையில் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது, மூத்த குடிமக்கள் எளிதில் பென்ஷன் ஸ்லிப் பெற வழிவகை செய்துள்ளது. இந்த சேவைக்கு எந்த விதமாக கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இந்த சேவையை பெறுவதற்கு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக வாடிக்கையாளர்கள் 7208933148 என்ற எண்ணுக்கு WAREG என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

இந்த குறுந்தகவலை உங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் இருந்து அனுப்ப வேண்டும். இதை வெற்றிகரமாக பதிவு செய்த பிறகு, எஸ்பிஐ-யில் இருந்து உங்கள் வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவலை பெறுவீர்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாக 9022690226 என்ற எண்ணுக்கு Hi என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

அப்போது, வங்கி இருப்பு குறித்த விவரம், மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் பென்ஷன் ஸ்லிப் என்ற மூன்று ஆப்ஷன்கள் கொண்ட மெசேஜ் வரும். இதில் பென்ஷன் ஸ்லிப் என்ற ஆப்ஷனை கொடுக்கும்போது உங்களது வாட்ஸ் அப் எண்ணுக்கே பென்ஷன் ஸ்லிப் வந்து விடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.