ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் இங்கிலாந்தின் மிரட்டல் வீரர்


ஐபிஎல் தொடரில் இடம்பெறுவது சிறப்பானதாக இருக்கும் என இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.


ஐபிஎல் விருப்பம்

கடந்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தின்போது இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புவதாக கூறி பங்கேற்கவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிரட்டலான வீரராக இருக்கும் ஜோ ரூட், தற்போது ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.

ஜோ ரூட்/Joe Root

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். அதில் இடம்பெறுவது சிறப்பானதாக இருக்கும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது நல்லதொரு வெளிப்பாடாக இருக்கும் என கருதுகிறேன்.

இந்த Format-யில் இருந்து நானே என்னை அந்நியப்படுத்திக் கொண்டேன். இப்போது அதில் விளையாட வேண்டிய நேரம் வந்துள்ளது. ஓய்வு குறித்து நான் அறவே எதுவும் சிந்திக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

ஜோ ரூட் 124 டெஸ்ட் போட்டிகளில் 10,504 ஓட்டங்களும், 158 ஒருநாள் போட்டிகளில் 6,207 ஓட்டங்களும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

ஜோ ரூட்/Joe Root

@Twitter



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.