சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (19). இவருக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி, தினமும் பள்ளிக்கு பேருந்தில் சென்று வந்தார்.
அப்பொழுது விக்னேசும் பேருந்தில் வேலைக்கு சென்று வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விக்னேஷ், மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை, விக்னேஷ் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இருவரும் தனிமையில் இருந்தபோது விக்னேஷ், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார். இதையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, இதுபற்றி புளியந்தோப்பு மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.