
சிம்புவை இயக்கும் ஏ. ஆர்.முருகதாஸ்
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் பல படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். கடைசியாக 2020ம் ஆண்டு ரஜினி நடித்த தர்பார் படத்தை இயக்குனர். அதன் பிறகு மீண்டும் விஜய்யின் உடன் இணைவார் என கூறப்பட்ட நிலையில், கதை விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. அதனால் மாஸ்டர் படத்தில் நடித்தார் விஜய். இந்த நிலையில் தற்போது சிம்புவிடம் ஒரு கதை சொல்லி ஓகே பண்ணி இருக்கிறார் முருகதாஸ். இந்த படம் குறித்த அறிவிப்புகள் டிசம்பரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.