தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள கோவிலாம்குளம் பகுதியை சேர்ந்த மாணவன் அஜித். இவன் சங்கரன்கோவில் கோமதி அம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அவரை வெறி நாய் கடித்துள்ளது.
இதனை மாணவன் பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து சக மாணவன் பொற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் மாணவனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்துள்ளார்.