"நான் ராமர், சந்திரபாபு ராவணன்" – ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அதிரடி பேச்சு

தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவர் என். சந்திரபாபு நாயுவை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ‘இன்றைய ராவணன்’ என விமர்சித்துள்ளது பேசுப் பொருளாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன், ’ என்டிஆரை முதுகில் குத்தி சந்திரபாபு நாயுடு எப்படி ஆட்சியைக் கைப்பற்றினார் என்பதை மக்களுக்கு நினைவூட்டி, அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற மற்றும் நாளுமன்ற தேர்தலில் சந்திரபாபுக்கு பை பை சொல்லி, வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த அரசியல் கொள்ளைகாரருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கூடாது’ என்றுள்ளார்.
 அவர் கூறியது, ‘’கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தனித்து ஒரு கட்சியை கட்டமைத்து, ஆட்சிக்கு வந்தவர்களை என்டிஆர், எம்ஜிஆர் மற்றும் ஜெகன் என்பார்கள். மறுபுறம் துரோகம் செய்து ஆட்சிக்கு வருபவர்களை சந்திரபாபு என்பார்கள். ஆம். என்டிஆர், எம்ஜிஆர் போல் நான் ஆட்சிக்கு வந்தவன். ஆனால் அவரோ, சொந்த மாமா ராமாராவுக்கு துரோகம் செய்து ஆட்சியை கைப்பற்றினார். இதனால் தான் மக்கள் என்னை ‘ ராமர்’ என்றும் சந்திரபாபுவை ‘ராவணன்’ என்றும் விமர்சனம் செய்கிறார்கள். சந்திரபாபு தான் இன்றைய ராவணன், அவர் ஒரு அரசியல் கொள்ளைகாரர். 
image
மேலும் பாபுவுக்கு உதவும் சில ஊடகங்கள் நம்மிடையே உள்ளது. சிறப்பாக ஆட்சி செய்து வரும், இந்த அரசு பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். மக்கள் நீங்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சந்திரபாபுவின் வளர்ப்பு மகன் சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்களைச் சந்தித்தார். ஆனால், மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, சிறுநீரக நோயாளிகளுக்குச் என்ன செய்தார்கள் என்பது தான்..
image
மக்கள் வாக்களிப்பதற்கான அளவுகோல் ஒரேமாறியானதாக இருக்க வேண்டும். நம் மாநிலத்தின் ஆட்சி, ஏமாற்றத்திலிருந்து பொறுப்புமிக்கவைக்கு மாற வேண்டும். இந்த அரசு, மக்களுக்கு செய்துவரும் நலதிட்டங்களை பாருங்கள், உங்கள் குடும்பங்கள் இந்த அரசின் கீழ் பயனடைந்திருந்தால் , இனி வரும் எல்லா தேர்தல்களிலும் எனது தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ’ என்றார்.
இதையும் படியுங்கள் –  ‘சந்தேகம் வராமல் இருக்க 4 மாதம் சம்பளம் கொடுத்து’ ராணுவத்தில் வேலை-ரூ. 16 லட்சம் மோசடி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.