இந்தோனேசியாவில் 3 நாட்கள் இடிபாடுகளில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!


இந்தோனேசியாவில் 270-க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட நிலநடுக்கத்தில், மூன்று நாட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த 5 வயது சிறுவன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நவம்பர் 21 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுகின்றனர்.

5.6 ரிக்டர் என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Azka Indonesia earthquakeAFP

மேலும் இந்த இயற்கை சீற்றத்தில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் மற்றும் 58,000 மலைப்பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ளனர்.

சமீபத்திய தகவல்களின்படி, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தது 310-ஆக உயர்ந்துள்ளது.

5 வயது சிறுவன் மீட்பு

இதனிடையே, சியாஞ்சூர் பகுதியில் நாக்ராக் கிராமத்தில் Azka எனும் 5 வயது சிறுவன் மூன்று நாட்களாக உணவு, நீர் எதுவும் இன்றி இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில், உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அதே வீட்டில் இடிப்பாடுகளில் சிக்கிய அவனுடைய தாயும் பாட்டியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக அஸ்கா ஒரு மெத்தையால் உயிர் பிழைத்தார், வீட்டின் இடித்த சிறிய கூரை அவரைப் பாதுகாத்தது என்று இடிபாடுகளில் இருந்து அஸ்காவை இழுத்த பொலிஸ் அதிகாரி முஹம்மது ஃபரித் கூறினார்.

வெளியே இழுக்கப்பட்டபோது, அஸ்கா அழவில்லை. உதவிக்கு அழைக்கவும் இல்லை. அவர் அமைதியாக இருந்தார் என வர மேலும் தெரிவித்தார்.

பின்னர் அஸ்கா, சியாஞ்சூரில் உள்ள சயாங் மருத்துவமனை கார் பார்க்கிங்கில் உள்ள தற்காலிக கூடாரத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அஸ்காவின் தந்தை மற்றும் சகோதரி அவருடன் இருப்பதாக கூறப்படுகிறது.

தாயை கேட்கிறான்

இதில், சோகத்திற்குரிய விடயம் என்னவென்றால், அஸ்கா மயக்கத்தில் தனது தாயை கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஆனால், அவருக்கு என்ன ஆனது என இப்போது அவனிடம் சொல்ல முடியாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணியாளர்களும் தீயணைப்பு வீரர்களும் இடிபாடுகளில் இருந்து அஸ்காவை இழுத்த தருணத்தின் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வைரலானது.

இந்த சம்பவத்தை அடுத்து, அஸ்காவைப் போல் இன்னும் பலர் உயிருடன் மீட்கப்படலாம் என மீட்புக்குழுவினரிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.