சிங்கப்பூர், ‘டி.வி.எஸ்., மோட்டார்’ நிறுவனம், முதல் முறையாக, அதன் விற்பனை மையத்தை சிங்கப்பூரில் துவங்கி, உலகளவில் தனது கால் தடத்தை விரிவுபடுத்தியுள்ளது. இந்த விற்பனை மையத்தில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் பைக்குகளான, ‘அப்பாச்சி ஆர்.ஆர்., 310’ மற்றும் அப்பாச்சி ஆர்.டி.ஆர்., பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, டி.வி.எஸ்., நிறுவனத்தின் பிரீமியம் பைக் வணிக பிரிவின் தலைவரான விமல் சும்பிலி கூறியதாவது:
சிங்கப்பூரில் அறிமுகமாவது, டி.வி.எஸ்., பிரீமியம் பைக்குகளின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதாக உள்ளது. மேலும், அந்நாட்டில், அப்பாச்சிக்கான அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்ப்போம் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement