சுவிட்சர்லாந்தின் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவது எப்படி?


சுவிட்சர்லாந்தின் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அல்லது C permit குறித்த சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.

சுவிஸ் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அல்லது C அனுமதி

இந்த நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அல்லது C அனுமதியை, நீங்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த உடனேயே பெற்றுக்கொள்ள முடியாது

அதற்காக சில நிபந்தனைகள் உள்ளன.

முதல் நிபந்தனையே, நீங்கள் எவ்வளவு காலமாக சுவிட்சர்லாந்தில் வாழ்கிறீர்கள் என்பதுதான்.

ஆக, எடுத்த உடனேயே உங்களுக்கு சுவிட்சர்லாந்து C அனுமதியை வழங்காது என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. எனவே, முதன்முறை நீங்கள் சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது உங்களுக்கு C அனுமதி கிடைக்காது, அதற்கு பதில், B அனுமதி அல்லது L அனுமதிதான் கிடைக்கும். முதலில் இவை ஓராண்டுக்கு மட்டுமே வழங்கப்படும் நிலையில், B அனுமதியை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளலாம். L அனுமதியை ஒருமுறைதான் புதுப்பிக்க முடியும்.

சுவிட்சர்லாந்தின் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவது எப்படி? | Switzerland Visa Residence Permit Permanent

சுவிஸ் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவதற்கான நிபந்தனைகள்

ஐரோப்பிய ஒன்றிய அல்லது ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் குடிமக்கள் சுவிட்சர்லாந்தில் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக வாழ்ந்தபின் சுவிஸ் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறலாம்.

ஐரோப்பிய ஒன்றிய அல்லது ஐரோப்பிய தடையில்லா வர்த்தக நாடுகளைச் சேராதவர்கள், தங்களிடம் B அனுமதி இருக்கும் பட்சத்தில், 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தபின்னர்தான் C அனுமதிக்கு விண்ணப்பிக்கவே முடியும்.

அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றிய அல்லது ஐரோப்பிய தடையில்லா வர்த்தக நாடுகளைச் சேராதவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவி, அல்லது தந்தை அல்லது தாய் C அனுமதி பெற்ற சுவிஸ் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் பிள்ளைகள் 12 முதல் 18 வயதுடையவர்களாக இருக்கவேண்டும்) ஐந்து ஆண்டுகளில் சுவிஸ் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறலாம்.

12 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் தங்கள் குடும்பத்துடன் இணைவதற்காக சுவிட்சர்லாந்துக்கு வருவார்களானால், அவர்களுக்கு தானாகவே C அனுமதி கிடைத்துவிடும்.

கீழ்க்கண்ட நிபந்தனைக்கு உட்படும் பட்சத்திலும் நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சுவிஸ் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் A2 மட்டத்தில் உங்கள் மாகாண அதிகாரப்பூர்வ மொழியில் மொழித்திறன் கொண்டவர்களாக இருந்தால்,

நீங்கள் உள்ளூர் மக்களுடன் நன்கு ஒன்றிணைந்து வாழ்பவராக இருந்தால், அதாவது:

  • நீங்கள் உள்ளூர் மக்களுடன் நல்ல உறவு வைத்திருந்தால்,
  • உள்ளூர் கூட்டமைப்பு ஒன்றுடன் தொடர்பு வைத்திருந்தால்,
  • நீங்கள் குற்றச்செயல்கள் எதிலும் ஈடுபடாதவராகவும், அரசு உதவியை பெறாதவராகவும், உங்களுக்கு கடன் எதுவும் இல்லாமலிருந்தால்,
  • நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சுவிஸ் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.