மதுரையில் இருக்கும் திருப்பாலை பகுதியில் செந்தில்குமார் என்ற 35 வயதான வாலிபர் தனது மனைவி வைஷ்ணவி (24 வயது) மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். இவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்.
வருடத்திற்கு இருமுறை மதுரைக்கு வந்து தன்னுடைய குடும்பத்தை பார்த்து சென்றுள்ளார். கடந்த மாதம் செந்தில்குமார் மதுரைக்கு வந்த நிலையில், தனது குழந்தையை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் சிலர் வந்து செந்தில்குமாருடைய பைக்கை மறித்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றனர்.
உயிருக்கு போராடிய செந்தில் குமாரை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவரது மனைவி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
எனவே அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவருடைய செல்போனை எடுத்து ஆய்வு செய்த நிலையில் தனது தாய் மாமா மகன் வெங்கடேசன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கணவனை கூலிப்படை ஏவி கொன்றதை வைஷ்ணவி ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து, வைஷ்ணவியின் கள்ளக்காதலன் வெங்கடேஷ் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சாந்தகுமார் மற்றும் வைஷ்ணவி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.