வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிரடி நடவடிக்கை! 13 நிறுவனங்களின் அனுமதி இடைநிறுத்தம்


13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி உடன் நடைமுறையாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பெண்களை அனுப்புவது தொடர்பில் அண்மைக்காலமாக வெளியான சர்ச்சைகளை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிரடி நடவடிக்கை! 13 நிறுவனங்களின் அனுமதி இடைநிறுத்தம் | License Of 13 Foreign Employment Agencies

இந்த நிலையிலேயே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இலங்கையிலிருந்து ஓமானிற்கு பணிப்பெண்களாக சென்ற பெண்கள் பலர் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்ததுடன், காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.