அமெரிக்காவில் ஜோடியாக நடைபயணம் சென்ற தம்பதி: இறுதியில் பூங்காவில் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்


அமெரிக்காவின் உட்டாவின் சியோன் தேசிய பூங்காவில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரது கணவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
 

உயிரிழந்த மனைவி

கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் உட்டாவில் உள்ள சியோன் தேசிய பூங்காவின் நாரோஸ் பிரிவில் தம்பதியினர் ஒருவர் அனுமதிக்கப்பட்ட 16 மைல் நடைப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது தம்பதியினர் மிகவும் குறைவான வெப்பநிலையை அனுபவித்ததாகவும், பின் இரவில் ஆபத்தான குளிரில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தேசிய பூங்கா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஜோடியாக நடைபயணம் சென்ற தம்பதி: இறுதியில் பூங்காவில் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம் | Us Woman Dead Husband Rescued Zion National ParkHolly Courtier and her daughter-  ஹோலி கோர்ட்டியர் மற்றும் அவரது மகள்

ஆபத்தான குளிரால் பாதிக்கப்பட்ட தம்பதியினரில் 33 வயதான கணவர் புதன்கிழமை காலை உதவியை நாடியுள்ளார், ஆனால் பூங்கா பார்வையாளர்கள் மற்றும் முதலில் பதிலளித்தவர்கள் முதலுதவி செய்ய முயன்றதை தொடர்ந்து அவரது 31 வயதான மனைவி தாழ்வெப்பநிலை (hypothermia) பாதிப்புகளால் உயிரிழந்து விட்டதாக தேடல் மற்றும் மீட்பு குழுக்கள் தீர்மானித்தன.

மருத்துவமனையில் அனுமதி

கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் கணவர் சீயோன் அவசர செயல்பாட்டு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

அமெரிக்காவில் ஜோடியாக நடைபயணம் சென்ற தம்பதி: இறுதியில் பூங்காவில் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம் | Us Woman Dead Husband Rescued Zion National ParkZion National Park in Utah- உட்டாவில் உள்ள சீயோன் தேசிய பூங்கா(Getty) 

இந்த சம்பவம் தொடர்பாக வாஷிங்டன் கவுண்டி ஷெரீப் அலுவலகம், மருத்துவ பரிசோதகரின் உட்டா அலுவலகம் மற்றும் தேசிய பூங்கா சேவை ஆகியவை பெண்ணின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.