அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்: முதல்வர் ஸ்டாலின் திட்டம்!

அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்த உள்ளதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் நமக்கு அர்ப்பணிக்கபடவில்லை என்றால் இந்த அளவிற்கு இந்த சமூகம் முன்னேறி இருக்குமா என்பதை நான் ஒரு முறை லட்சம் முறை கோடி முறை சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஜனநாயக குடியரசு என்ற ஒன்று இல்லை என்றால் நாம் வளர்ந்திருக்க முடியாது. இந்த அரசியலமைப்பு சட்டம் அடிப்படை ஒருமுறை கூட மாற்ற தக்கதல்ல.

இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தின் போது அடிப்படையை மாற்றியதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி தான் என்று சட்டத்தில் தொகுதி 17 ல் ஒரு பக்கத்தில் சொல்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து அதை நாம் எதிர்த்து வருகிறோம்.

இந்தியா மதச் சார்பற்ற நாடு, இந்தியா இறையாண்மை நாடு, இந்தியா ஜனநாயக குடியரசு நாடு. ஆளுநர் ஒரு இடத்தில் ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இந்தியா மத சார்பறற நாடு என்பதற்கு பதிலாக மதச் சார்புடைய நாடு என்று பேசி இருக்கிறார். அது தவறு. ஆளுநர் அதை சொல்லியிருக்க கூடாது தவிர்த்திருக்க வேண்டும்.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தை உருவாகியது கலைஞர். வீட்டில் வேலை செய்கிற பெண்களுக்கு வாரியம் ஒன்றை 2007 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அமைத்தார். அந்த வாரியம் பற்றிய விழிப்புணர்வு இல்லை, 81 ஆயிரம் பேர் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் அது வருத்த பட வேண்டிய ஒன்று .

இந்த வாரியத்தில் தொழிலாளர்களுக்கு நிறைய பயன் இருக்கிறது. கட்டிட தொழிலாளர்கள் வாரியத்தில் 12 லட்சத்திற்கு மேல் இருந்த உறுப்பினர்கள் 4 லட்சத்திற்கு வந்துள்ளார்கள். வீட்டு வேலை பணியாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

பெண்கள் என்றால் அடுப்பு ஊதும் வேலையை செய்பவர்கள் என்று இருந்ததை உடைத்தது பெரியார், அண்ணா, கலைஞர் தான்.

அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார் முதல்வர். சட்டமன்ற ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை பயன்படுத்தி பள்ளிக்கு ஒரு வகுப்பறையை அதிக நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பு அமைக்கலாம் என்று கூறி இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.