மாலை மாற்றி பிரபல நடிகர், நடிகைக்கு நடந்த நிச்சயதார்த்தம்! திருமண பந்தம் முறிந்துவிட்டதாக தெரிவிப்பு


பிரபல நடிகருக்கும், நடிகைக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தங்களில் பந்தம் முறிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

திருமண நிச்சயதார்த்தம்

கன்னட திரையுலகில் பிரபல நடிகர், நடிகையாக இருப்பவர்கள் வித்யாபரண் மற்றும் வைஷ்ணவி கவுடா, இதில் வைஷ்ணவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் ஆவார்.

இவர்கள் 2 பேருக்கும் சமீபத்தில் பெற்றோரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.
மாலையும் கழுத்துமாக இருந்த புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் வித்யாபரண், வைஷ்ணவி கவுடா இடையே திருமண பந்தம் முறிந்துள்ளது. அதாவது வித்யாபரண் பற்றி நடிகை வைஷ்ணவி கவுடாவுடன் ஒரு பெண் பேசும் ஓடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

மாலை மாற்றி பிரபல நடிகர், நடிகைக்கு நடந்த நிச்சயதார்த்தம்! திருமண பந்தம் முறிந்துவிட்டதாக தெரிவிப்பு | Vaishnavi Actress Vidyabaran Relationship

பந்தம் முறிவு

அதில் வித்யாபரண் பற்றி வைஷ்ணவி கவுடாவிடம் அந்த பெண் அவதூறாக பேசுவது, அவரை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவது இடம் பெற்றிருக்கிறது.

இதன்காரணமாக வித்யாபரணை திருமணம் செய்ய வைஷ்ணவி மறுத்து விட்டதாகவும், அவர்களுக்கு நடைபெற இருந்த திருமணம் முறிந்து விட்டதாகவும் தெரிகிறது.

மேலும் தனக்கும் வித்யாபரணுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை, 2 வீட்டு பெற்றோரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். மாலை மட்டும் மாற்றி இருந்தோம் என்று வைஷ்ணவி திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஓடியோவில் பேசிய பெண் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி வித்யாபரண் பொலிசில் புகார் அளித்துள்ளார்.  

மாலை மாற்றி பிரபல நடிகர், நடிகைக்கு நடந்த நிச்சயதார்த்தம்! திருமண பந்தம் முறிந்துவிட்டதாக தெரிவிப்பு | Vaishnavi Actress Vidyabaran Relationship



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.