கத்தார் உலகக்கோப்பை கால்பந்துக்கு பெரும் சிக்கல்! பீதியை கிளப்பும் ஒட்டக காய்ச்சல்


கத்தாரில் உலக கோப்பை கால்பந்து திருவிழா காரணமாக மக்கள் கூட்டம் நிரம்பியிருக்கும் வேளையில் அங்கு ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உலக கோப்பை தொடர் நவம்பர் 20ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் டிசம்பர் 18ஆம் திகதி வரை நடைபெறுகிது.

உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் கத்தாருக்கு வருகை தந்துள்ளனர். அதேபோல், கத்தாரிலும் 28 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
அதன்படி சுமார் 40 லட்சம் பேர் அங்கு குவிந்திருக்கும் வேளையில் தான் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாலைவனம் சார்ந்த பகுதிகளில் ஒட்டக காய்ச்சல் எப்போதும் இருப்பது இயல்பு.
ஒட்டகம் போன்ற விலங்குகளில் இருந்து பரவும் இந்த காய்ச்சலுக்கு மெர்ஸ் (MERS) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு முதல் முதலில் பதிவான இந்த மெர்ஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 2,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.அதேபோல், 935 பேர் உயிரிழந்துள்ளனர்.

கத்தார் உலகக்கோப்பை கால்பந்துக்கு பெரும் சிக்கல்! பீதியை கிளப்பும் ஒட்டக காய்ச்சல் | Qatar Worldcup Fans Risk Camel Flu Who

Google  

அறிகுறிகள் என்னென்ன?

எனவே, மெர்ஸ் தொற்றும் உலகப் பெருந்தொற்றாக பரவும் அபாயம் உள்ளது.
முதல் முறையாக மெர்ஸ் காய்ச்சல் சவுதியில் கடந்த 2012ல் கண்டறியப்பட்டது.
இது தொடர்பான தகவல்களை பிரித்தானியாவை சார்ந்த அறிவியல் இணையதளம் IFLScience வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக பார்வையாளர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
பெரும்பாலான மெர்ஸ் நோய்த்தொற்றுகள் அறிகுறியற்றவை ஆகும்.

இதன் அறிகுறிகள் என்றால் காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல் போன்றவைகள் ஆகும்.
உலக சுகாதார அமைப்பின் இந்த எச்சரிக்கை உலக கோப்பை கால்பந்து தொடருக்கு சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. 

கத்தார் உலகக்கோப்பை கால்பந்துக்கு பெரும் சிக்கல்! பீதியை கிளப்பும் ஒட்டக காய்ச்சல் | Qatar Worldcup Fans Risk Camel Flu Who

AP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.