தங்க ஆபரண கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை-வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படும்

விமான பயணிகளாக வருகை தரும் தங்க ஆபரண கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என்று நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்தார்.

ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு விமான பயணிகளாக வருகை தருபவர்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கமாகும்.

தங்க ஆபரணங்களின் தரம் மற்றும் அளவு பற்றி ஆராய்வதற்கு விசேட தொழில்நுட்ப முறையினை அமுல்படுத்துவது குறித்து சுங்கப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது என்றும் நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.