2வது ஆக்கி போட்டி : பிளேக் கோவர்ஸ் ஹாட்ரிக் கோல் – இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

உலக கோப்பை ஆக்கி போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒடிசா மாநிலத்தில் உள்ள 2 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி அடிலெய்டில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசி நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிளாக் கோவர்ஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது போட்டி இன்று நடந்தது.இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 7-4என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சார்பில் பிளேக் கோவர்ஸ் ஹாட்ரிக் கோல் அடித்தார். ஜாக் வெல்ச் 2 கோல் ,ஜேக்கப் ஆண்டர்சன் ,ஜேக் விட்டன் தலா ஒரு கோல் கோல் அடித்தனர்.

இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல் அடித்தார்.ஹர்திக் சிங், ரஹீல் முகமது,தலா ஓரு கோல் அடித்தனர்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.