அதிமுககாரனுக்கு கூட கொடுப்பேன் உனக்கு கிடையாது, அடுத்துக்கொள்ளும் திமுக பிரமுகர்கள்

Tamil Nadu Political News: குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மணி. இவரது மகன் தமிழரசன் மற்றும் இவரது மச்சான் பால்ராஜ் இணைந்து  திருமுடிவாக்கம் பகுதியில் உள்ளஅனைத்து தனியார் நிறுவனங்களை மிரட்டி மாமூல் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பால்ராஜ் மற்றும் தமிழரசன் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தரவில்லை என்றால் லாரியை கொளுத்தி விடுவோம் என மிரட்டியதாகவும் குன்றத்தூர் காவல் நிலையத்தில் சம்பந்த பட்ட நபர்கள் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மேல் குன்றத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து திருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மணியின் மச்சான் பால்ராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் வைத்தியலிங்கம் மகன் கார்த்திகேயனுக்கு இடையே கட்டிடம் கட்டும் மணல் வைக்கும் காண்ட்ராக்டரில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவரை ஒருவரி மிரட்டி பேசும் ஆடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிமுக காரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேன் உனக்கு கொடுக்க மாட்டேன் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போது திமுக பிரமுகர்களால் இந்த நிலை இருப்பதால், அங்குள்ள நிறுவன ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனதாகவும் இதற்கு காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.