இன்று சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்பேசியதாவது:- “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் அலட்சியமாக சிகிச்சைகள் வழங்கப்படுகிறது என்ற பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. அந்த தகல்வல்களை யாரும் நம்ப வேண்டாம்.
தினந்தோறும் 6,00,000 பேர் அரசு மருத்துவமனைகளின் மூலம் பயனடைகிறார்கள், 70,000 நபர்கள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள், தினமும் 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது.
மேலும், நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரிடம் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கும், சுகாதார துறைக்கும் கல்வித்துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதார துறையும் கல்வித்துறையும் சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். அந்த கேள்விகளுக்கான பதில்களை தமிழக அரசு அனுப்பி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது” என்றுத் தெரிவித்துள்ளார்.