குடந்தையில் தயாரிக்கப்பட்ட பிபின் ராவத் உருவச்சிலை டெல்லிக்கு அனுப்பி வைப்பு

கும்பகோணம்: ஊட்டி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் இறந்தார். இவரது மார்பளவு ஐம்பொன் சிலை, வரும் டிசம்பர் 2ம் தேதி (வெள்ளிக்கிழமை) புதுடெல்லி ராணுவ தலைமையகத்தில் நிறுவப்பட உள்ளது. இதற்காக கடலூர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சிற்ப கூடத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் பிபின் ராவத், சிலை வடிவமைக்கப்பட்டது. நேற்று இந்த சிலை கும்பகோணத்தில் இருந்து புதுடெல்லிக்கு கார் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சோழா.மகேந்திரன், கூட்டமைப்பு செயலாளர் சத்தியநாராயணன், குடந்தை மாநகர மருந்து வணிகர்கள் சங்க அமைப்பு தலைவர் அறிவுமணி, செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கு, சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி தேசபக்தி பாடல்கள் பாடி அனுப்பி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.