வாழ்வில் தன்னுடைய கடினமான நேரத்தில் ஜுவாலா குட்டா தான் தனக்கு ஊக்கம் கொடுத்தார் என நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
விஷ்ணு விஷால்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால்.
இவருக்கும் ரஜினி நடராஜ் என்ற பெண்ணிற்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்த நிலையில் 2018ல் விவாகரத்து ஆனது.
இதையடுத்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை கடந்தாண்டு விஷ்ணு விஷால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்துக்கு பின்னர்
மனைவி குறித்து சமீபத்தில் விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில், விவாகரத்துக்கு பின்னர் விபத்தில் அடிப்பட்டு ஓய்வில் இருந்தேன். உடல் எடையெல்லாம் மிகவும் அதிகமானது. அந்த சமயத்தில், ஜுவாலாதான் எதிர்த்து போராடி மீண்டும் வரவேண்டும் என என்னை ஊக்கப்படுத்தினார்.
அப்படித்தான் எங்கள் காதல் வளர்ந்தது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.