வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: விஸ்தாரா விமான நிறுவனம் டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியாவுடன் இணைய உள்ளது.
கடன் சுமை போன்ற காரணங்களால், நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதை அடுத்து கடந்த ஜனவரியில் டாடா சன்ஸ் குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
![]() |
இந்நிலையில் மற்றொரு முன்னணி விமான நிறுவனமான விஸ்தாராவை ஏர் இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கின. தற்போது ஏர் இந்தியாவின் 25 சதவீத பங்குகளுடன் உரிமையாளராக ஏர் இந்தியா செயல்படுவதாக விஸ்தாரா தெரிவித்துள்ளது. மேலும் டாடா குழுமம் விஸ்தாராவில் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளது மீதமுள்ள 49 சதவீத பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடம் உள்ளது.
வரும் மார்ச் 2024க்குள் விஸ்தாராவை ஏர்இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. அடுத்த நிதியாண்டின் (2023-2024) இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என இரு நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement