சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் காமேஸ்வரன். இவர் ஆன்லைன் மூலம் பட்டய படிப்பு படிக்கும் போது கேரளாவை சேர்ந்த சுஜிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறவே, இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காதலனை கரம்பிடிக்க நினைத்த சுஜிதா, கேரளாவில் இருந்து சென்னை வந்து காமேஸ்வரனை பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதற்கிடையே, மகளை காணவில்லை என்று சுஜிதாவின் பெற்றோர் திருச்சூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் சுஜிதாவின் செல்போன் சிக்னலை வைத்து சென்னை வந்தனர்.
இதனை அறிந்த காதலர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி திருவொற்றியூர் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். கேரள போலீசாரும் திருவொற்றியூர் காவல்நிலைய வர, வாட்ஸ் ஆப் கால் மூலம் நீதிபதியிடம் போலீசார் நடந்த சம்பவத்தை எடுத்து கூறியுள்ளனர்.
நீதிபதி அவர்கள், இருவரும் மேஜர் என்பதால், இந்த திருமணம் செல்லும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக போலீசார் காதல் கணவனுடன் சுஜிதாவை அனுப்பி வைத்தனர்.