வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் டுவிட்டரை நிறுத்தி வைப்பதாக மிரட்டியுள்ளது என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் டுவிட்டர் நிறுவத்தை வாங்கிய எலான் மஸ்க், அதை சீர்செய்ய பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மற்றும் ஆட்குறைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், மஸ்க் ஒரு புதிய டுவிட்டர் கொள்கையை அறிவித்தார். மேலும் சமூக ஊடக தளம் இனி வெறுப்பூட்டும் பேச்சு அல்லது “எதிர்மறை” உள்ளடக்கம் கொண்ட டுவீட்களை விளம்பரப்படுத்தாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ,ஆப்பிளின் ஆப் ஸ்டோர் பிரிவின் தலைவர் பில் ஷில்லர், தனது டுவிட்டர் கணக்கை நிறுத்துவதாக அச்சுறுத்தியுள்ளது என மஸ்க் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து டுவிட்டர் நீக்கப்படுமா என்று எலான் மஸ்க்கிடம் அவரின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அப்படி நீக்கப்பட்டால், ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி, சந்தைப்படுத்தி, அதில் டுவிட்டரை நிறுவுவேன் என்று எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement