இஸ்லாமாபாத் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக ஆசிம் முனீர்அஹமது நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்த கமார் ஜாவேத் பஜ்வாவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக ஆசிம் முனீர் அஹமது பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து பஜ்வா விடைபெற்றார்.
ஐ.எஸ்.ஐ., எனப்படும் பாக்., உளவு அமைப்பின் தலைவராக இருந்த ஆசிம் முனீர் அஹமதை, அடுத்த தலைமைத் தளபதியாக நியமித்து, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், 24ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement