புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் தொந்தரவு வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஒடுகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (19). இவர் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அந்தப் பெண் கர்ப்பமானார். ஆனால் தினேஷ் குமார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதை எடுத்து அந்த பெண்ணுக்கும் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் தினேஷ் குமாரை கைது செய்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.