உணவு பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ,இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் லங்கா சதொச நிறுவனத்தின் வருமானம் 400% அதிகரித்துள்ளது. நட்டத்தை எதிர்கொண்டிருந்த லங்கா சதொச நிறுவனத்தின் வருமானம் 2022 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மாத்திரம் 5,389 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் வாணிப, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
நுகர்வோர் அதிகாரசபை சட்டம் எதிர்வரும் வாரத்தில் சட்டமா அதிபரிடம் திருத்தத்திற்காக சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு நுகர்வோர் தொடர்பில் ,பாடசாலை மாணவர்களின் அறிவை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களையும் வர்த்தக அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வூட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் பிரதேச சபை தலைவரின் தலைமையில் நுகர்வோர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு, கிராமிய மக்களுக்கு, சந்தையில் வாடிக்கையாளர்களைக் கண்டறிவதில் எழும் பிரச்சனைகள் மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பில் பிரதேச மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.இதன் மூலம் சந்தை செயல்பாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.