ஹைதராபாத் : தெலுங்கானாவில், பள்ளி மாணவர்கள் ஐந்து பேர், சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ‘வீடியோ’ எடுத்த புகாரில், போலீசார் அவர்களை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா, ஹைதராபாதில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஐந்து பேர் மற்றும் ஒரு மாணவி நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்டில், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாதபோது, அங்கு சென்ற மாணவர்கள், அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தை வீடியோ எடுத்து, வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துள்ளனர்.
இதன்பின், 10 நாட்கள் கழித்து, இந்த ஐந்து மாணவர்களில் ஒருவர், வேறொரு மாணவருடன் சென்று, மீண்டும் அம்மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து, அம்மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதன்படி, பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
விசாரணைக்குப் பின், போலீசார் ஐந்து மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement