தனது காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டுக்கே சென்று, நாடக காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரகளை ஈடுபட்ட சம்பவம் கிருஷ்ணகிரி அருகே அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை, அதே பகுதியில் வசிக்கக்கூடிய விஜய் என்ற நாடக காதலன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மேலும், மாணவி கல்லூரிக்கு சென்று வரும்போது வழிமறித்து தனது காதலை ஏற்க வேண்டும் என்று, தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் நாடக காதலன் விஜய்.
இந்நிலையில், சம்பவம் நடந்த நேற்று இரவு மாணவியின் வீட்டிற்கு தனது நண்பர்களுடன் வந்த நாடக காதலன் விஜய் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நாடக காதலன் விஜய் மற்றும் அவரின் நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக மாணவியின் வீட்டில் ரகளை செய்த விஜய் மற்றும் அவனின் நண்பர்களை மாணவியின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பிடித்து வைத்து தர்ம அடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.